ரீல்ஸ்! ரீல்ஸ்! எப்போ பாத்தாலும் ரீல்ஸ்! செல்போனில் மூழ்கிய குடும்பம்! படிப்பு போச்சு! இப்ப தாயும் குழந்தைகளும் மாயம்! Crime

ரீல்ஸ்! ரீல்ஸ்! எப்போ பாத்தாலும் ரீல்ஸ்! செல்போனில் மூழ்கிய குடும்பம்! படிப்பு போச்சு! இப்ப தாயும் குழந்தைகளும் மாயம்!

Advertisement

நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த வெங்கட் சுப்பிரமணியன் என்பவரது மனைவி சாந்தி மற்றும் மூன்று குழந்தைகள் (காளிஸ்ரீ, கங்காஸ்ரீ, சூர்யா பாண்டியன்) கடந்த 25 நாட்களுக்கும் மேலாக காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விவரங்கள் என்ன?

சென்னையில் ஸ்கார்ப் கம்பெனியில் பணியாற்றி வரும் வெங்கட் சுப்பிரமணியன், குடும்பத்திற்கு பணம் அனுப்பி வந்த நிலையில், ஊருக்கு வந்தபோது மனைவி சாந்தி எப்போதும் ரீல்ஸ் வீடியோ பார்த்துக்கொண்டு செல்போனில் அதிக நேரம் செலவழிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

 

 

மேலும் இரண்டு பெண் குழந்தைகளும் படிப்பில் கவனம் செலுத்தாமல் படிப்பை இடையில் நிறுத்தியிருந்ததைப் பார்த்து வருத்தமடைந்தார்.

சின்னத்திரை வெப் சீரீஸில் நடித்து வந்த மகன் சூர்யா பாண்டியனை பாரதி பள்ளியில் இருந்து லிட்டில் பிளவர் பள்ளியில் சேர்க்க வேண்டும் என மனைவி சாந்தி கூறியதற்கு வெங்கட் சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்ததால், இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த வெங்கட் சுப்பிரமணியன், “இனி உங்களை தனியாக வீட்டில் விட்டுச் செல்ல முடியாது” எனக் கூறி, செல்போனைப் பறித்துக்கொண்டு, இரண்டு மகள்களையும் ஹாஸ்டலில் சேர்க்கவும், மனைவியை காப்பகத்தில் சேர்க்கவும், மகனை பள்ளி விடுதியில் சேர்க்கவும் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் 17ஆம் தேதி பாவூர் சத்திரம் சென்ற வெங்கட் சுப்பிரமணியன், திரும்பி வந்தபோது வீட்டில் மனைவி சாந்தியும் மூன்று குழந்தைகளும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர்கள் கிடைக்காததால், நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

வெங்கட் சுப்பிரமணியனின் உருக்கமான வேண்டுகோள்

25 நாட்களுக்கு மேலாக காணாமல் போன மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டுக்கு திரும்புமாறு கோரி வெங்கட் சுப்பிரமணியன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

“அப்பா தேடாத இடம் கிடையாது. இப்போது பாருங்கள், சூர்யா சிஎம் விஜய் சாரைப் பார்ப்பதற்கு மனு கொடுக்க வந்திருக்கேன். அவர் சிஎம் இல்லை... நான் கோயில் கோயிலாக அலையறேன்.

ஒவ்வொரு இடத்திலும் இருக்கேன். எப்படி 30 நாள் இருந்துட்டு இருக்கீங்கன்னு தெரியல. சேஷன்ல நான் டவுன் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்து 18ஆம் தேதி வரை கொடுத்தாச்சு. மதுரை ஹைகோர்ட்டிலும் முறையிட்டிருக்கேன். எனக்கு எந்த தகவலும் வரல.

இதுல அரசியல் இல்லை ஒன்றும் வேண்டாம். எனக்கு என்னோட குழந்தைகள் வந்து வீட்டுதாங்க. யார் நீங்க அடைக்கலம் கொடுத்து வச்சிருக்கீங்கன்னு தெரியல. இல்ல நீங்க உயிரோட இருக்கீங்களா இல்லையாங்கறது எனக்கு தெரியல. எங்கயும் இருந்தா யாராவது அடைக்கலம் கொடுத்துருந்தா சட்டப்படி என்ன செய்யணுமோ செய்யுங்க.

நான் ஒரு சராசரி அப்பா... ஒரு பாசக்கார அப்பா. ஸ்கூல் போல அப்படிங்கிறதுக்காக கண்டிச்சேன். எவ்வளவோ சொன்னேன் ஹாஸ்டல்ல சேர்த்து படிக்க வைக்கணும். ஆனா இத ஒரு காரணமா சொல்லிக்கிட்டு நீங்க வந்து போயிட்டீங்க.

எங்க இருந்தாலும் தகவலை டவுன் காவல் நிலையத்துக்கு தெரிவியுங்க. தமிழ்நாடு அரசுக்கு தெரிவிச்சுதான் ஆகணும். ஒரு மனைவி மக்களை பிரிச்சு வைக்கிறது மிகப்பெரிய தவறு. போதும் என்னை படுத்துனது போதும்.”

முன்பு சில தினங்கள் கோபித்துச் சென்ற சாந்தி விரைவில் திரும்பியிருந்த நிலையில், இம்முறை நீண்ட நாட்களாக வராதது வெங்கட் சுப்பிரமணியனுக்கு மனரீதியான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய நிலை

போலீசார் மாயமான நால்வரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். வெங்கட் சுப்பிரமணியன் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்சனைகள் சமூக ஊடக பயன்பாட்டால் அதிகரிப்பது குறித்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Summary in English : Venkat Subramanian from Tirunelveli town reported his wife Shanthi and three children (Kalisri, Gangasri, Suryapandiyan) missing after a family dispute over mobile phone usage and children's education. He had planned to send the children to hostel and wife to a care home. After 25+ days, he released an emotional video appeal urging them to return home safely. Police are searching intensively.

Advertisement

📰 Related News

விதவிதமாக உடலுறவு.. குவிந்து கிடந்த ஆபாச காட்சிகள்.. பெரம்பூர் தலையில்லா உடல் வழக்கின் முழு பின்னணி!
2 days ago
அவள முழுசா *க்க முடியல.. கீதாவ கூட்டிகிட்டு, நீயும் ஓ*** வா.. 23 வயது செவிலியரிடம் 55 வயது மருத்துவர் ஆபாச பேச்சு.. ஆடியோ..
5 days ago
“குற்றவாளியுடன் போலீஸ் மனைவி உடலுறவு” கையும் களவுமாக பிடித்த கணவர்.. தீயாய் பரவும் வீடியோ.. ஒழிந்திருந்த இடத்தை பாருங்களே
5 days ago
வெளியான புதிய வீடியோ! யாருக்கும் இது போன்ற நிலை வரக்கூடாது! திருச்சி சம்பவத்தில் நடந்தது இது தான்!
6 days ago